2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

பெண் வைத்தியர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதன்படி குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கொல்கத்தா மேல்நீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதனை கொல்கத்தா மேல்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் கொலை தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் இன்று (22) விசாரணை நடைபெற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வழக்குகளின் பட்டியலின்படி, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இன்று (22) மீண்டும் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X