Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற விசாரணையின்போது, பெண் சட்டத்தரணிகள் பர்தா அணியக்கூடாது என்று, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதியன்று, ஸ்ரீநகரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பெண் சட்டத்தரணி சையத் அய்னைன் காத்ரி என்பவர் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் முகத்தை மறைத்து பர்தா அணிந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல் பார்தி, பர்தாவை அகற்றுமாறு குறித்த பெண் சட்டத்தரணியை அறிவுறுத்தினார். நீதிபதியின் அறிவுரையை குறித்த பெண் சட்டத்தரணி ஏற்கவில்லை. மேலும், பர்தா அணிவது எனது அடிப்படை உரிமை. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று, அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ராகுல் பார்தி கூறும்போது, “மனுதாரர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வது அவசியம். முகத்தை மறைத்து வழக்கறிஞர்கள் ஆஜராவது ஏற்புடையது கிடையாது. பெண் சட்டத்தரணிகளின் ஆடைகள் தொடர்பான வழிகாட்டு நெரிகள் குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பதிவாளர், கடந்த 5ஆம் திகதி, பெண் சட்டத்தரணிகளுக்கான ஆடைகள் குறித்த வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வழிகாட்டுதல்கள் குறித்து உயர் நீதிமன்ற பெண் நீதிபதி மோக்சா கஜுரியா காஸ்மி, ஆய்வு செய்து, அண்மையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
பார் கவுன்சிலின் விதிகளின்படி பெண் சட்டத்தரணிகள் முழுநீள கருப்பு நிற ஜாக்கெட் அல்லது பிளவுஸ், வெள்ளை காலர், வழக்கறிஞர்களுக்கான கவுனை அணிய வேண்டும். சேலை, நீளமான ஸ்கர்ட், பஞ்சாபி உடை, சுடிதார்-குர்தா அல்லது சல்வார்-குர்தா அல்லது பாரம்பரிய உடைகளை அணியலாம். கோடை காலங்களில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் கருப்பு நிற கவுன் அணிவதில் இருந்து சட்டத்தரணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது” என, நீதிபதி மோக்சா கஜுரியா காஸ்மி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .