2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

பெண் குழந்தை பிறந்தால் பணம்; ஆண் குழந்தை பிறந்தால் மாடு

Freelancer   / 2025 மார்ச் 11 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் இனி 2 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்த ஆந்திர மாநிலம்,விஜயநகரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அப்பல் நாயுடு, 3ஆவதாக பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 பரிசாக வழங்குவேன் எனவும் கூறியுள்ளார்.

“ஒரு வேளை ஆண் குழந்தை பிறந்தால் ஒரு பசு மாடு பரிசாக வழங்குவேன்” எனவும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியிலும் அவரது சொந்த கட்சியினர் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்த எம்.பி., ஆண் குழந்தை பிறந்தால் மட்டும் ஏன் பசு மாடு வழங்குவதாக அறிவித்துள்ளார். 

ஆந்திராவில் ஆண் பிள்ளை மாடு மேய்க்கத்தான் உதவுவான் என எம்.பி. முடிவு செய்து விட்டாரோ என எதிர்க்கட்சியினர் கேலி செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .