Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 07 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூட்டியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம்; வீசியதால், சந்தேகப்பட்ட அண்டை வீட்டார்கள், வீட்டைத் திறந்து பார்த்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கே.கே நகர் உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 40). இவருக்கு திருமணமாகி மஞ்சு என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலை விடுமுறை என்பதால், மஞ்சு தனது பிள்ளைகளுடன் திண்டிவனத்தில் உள்ள பெற்றோர்கள் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அதனால் ஹரிகிருஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த அக்கம்பக்கத்த??னர், உடனடியாக ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்பொழுது படுக்கை அறையில் ஹரிகிருஷ்ணன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக கேகே நகர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
56 minute ago
3 hours ago