2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

புதிய குடி​யுரிமை சட்​டத்தில் கடும் கட்டுப்பாடு

Freelancer   / 2025 மார்ச் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்​தி​யா​வில்,  புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்டு வரும் வகை​யில், மக்​களவை​யில் குடியுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. 

அந்தவகையில், இந்​தி​யா​வில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்​படுத்தி நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ, இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, அதி​கபட்சம் 7 ஆண்டு சிறை தண்​டனையுடன், ரூ.10 இலட்​சம் அபராதம் விதிக்​கப்​படும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

 இந்த புதிய மசோதாவில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள் பற்​றிய விவரம்:

 இந்​தி​யா​வில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்​படுத்தி ஒரு​வர் நுழைந்​தாலோ, தங்​கியிருந்​தாலோ அல்​லது இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, 2 ஆண்டு​கள் முதல் அதி​கபட்​சம் 7 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​படும். மேலும், ரூ.1 இலட்​சம் முதல் ரூ.10 இலட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.

விசா காலம் முடிந்து இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினரை கண்​காணிக்க உதவும் வகை​யில் ஹோட்​டல்​கள், பல்​கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​கள், வைத்தியசாலைகள் ஆகியவை வெளி​நாட்​டினர் பற்​றிய விவரங்​களை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். 

அதே​போல, இந்தியாவுக்கு பயணியர் வாகனங்களை இயக்கும் சர்​வ​தேச விமான நிறு​வனங்கள், கப்​பல் நிறு​வனங்​கள் ஆகியவை தங்​களது ஊழியர்​கள், பயணி​களின் விவரங்களை தெரிவிக்க வேண்​டும்.


இது குறித்து மத்​திய அரசு அதி​காரி​கள் கூறிய​தாவது,

“வெளி​நாடு​களில் உள்ள இந்​திய தூதரகங்​கள், அனைத்​து​ வித​மான விசாக்​களை​யும் வெளி​நாட்​டினருக்கு வழங்க முடி​யும். குடி​யுரிமை பிரிவு 167 நாடு​களை சேர்ந்த மக்​களுக்கு 7 பிரிவுகளின்​கீழ் மின்​னணு விசாக்​களை வழங்க முடி​யும்.

ஜப்​பான், தென் கொரியா மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்தை சேர்ந்​தவர்​கள் ஏற்​கெனவே இ-விசா வைத்​திருந்​தால், இந்​தி​யா​வில் உள்ள 6 குறிப்​பிட்​ட வி​மான நிலை​யங்​களில்​ வி​சாக்​களை பெற முடி​யும்​” என கூறியுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .