2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிரிட்ஜை திறந்த சிறுமி பரிதாப மரணம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் ஐந்து வயது சிறுமி குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பிரிட்ஜில் தின்பண்டம் எடுப்பதற்காக திறந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த சிறுமி மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவரும் நிலையில், முதல் கட்ட விசாரணையில் பிரிட்ஜின் கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்ததால் தான் சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து எலக்ட்ரிசியன்கள் கூறியபோது ஃப்ரிட்ஜை அவ்வப்போது பழுது பார்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .