2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

Freelancer   / 2024 மே 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாவது முறையாக போட்டியிடும் உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் நேற்று (14) பிரதமர் மோடி, வேட்புமனுதாக்கல் செய்தார்.

7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான நான்கு கட்ட தேர்தல்கள் தற்போதுவரை நிறைவடைந்துள்ளன. இந்தச் சூழலில் 49 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட தேர்தல் வருகிற மே 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது வேட்புமனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.

மனுதாக்கலின் போது உ.பி முதலமைசர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார். மேலும் பிரதமரின் வேட்புமனுவை பண்டிட் பைஜ்நாத் படேல், லால் சந்த், குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.

இதுவரை உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசி தொகுதியில், 2 முறை பிரதமர் மோடி போட்டியிட்டுள்ளார்.

இதன்படி 2014 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மோடி 5,81,000 வாக்குகளை பெற்றார். அப்போது, இவரை எதிர்த்து களமிறங்கிய தற்போதை டெல்லி முதலமைச்சர் ஆம்ஆத்மியின் கெஜ்ரிவால் 2 இலட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார்.

2019இல் இங்கு மீண்டும் போட்டியிட்ட பிரதமர், 6 இலட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றினார். அப்போது அவரை, எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .