Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
காங்கிரஸ் கட்சியை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில், புதன்கிழமை (18), பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில், செவ்வாய்க்கிழமை (17) தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, புதன்கிழமை (18) பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .