Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 26 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானத்தில் பாம்புகளை கடத்திய பெண்கள் இருவர், தெலுங்கானா மாநிலம், ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பேங்கொக்கில் இருந்து வந்த விமானத்தில் 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.
அதனை கண்ட சுங்க அதிகாரிகள், அந்த கூடைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 2 பாம்புகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் பாம்புகளுடன் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்துள்ளனர்.
இந்த பாம்புகள், அதிக விஷம் கொண்டவை என தெரியவந்துள்ளது. குறித்த 2 பெண்களும் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago