Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம், 20ஆம் திகதிக்குள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே 545 கோடி ரூபாயில் சுமார் 2 கிலோமீற்றர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பாலத்தில் 3 முறை சரக்கு ரயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூக்குப்பாலத்தை திறந்து மூடி பல்வேறு கட்ட சோதனைகளும் செய்யப்பட்டன.
பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி வருகிற 13ஆம் திகதி பெங்களூருவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் மண்டபம் வருகிறார்.
தொடர்ந்து அவர் 2 நாள்கள் தங்கி புதிய ரயில் பாலத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வுக்கு பின்னர் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா திகதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
அதன்படி வருகிற 20ஆம் திகதிக்குள் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடந்து, ரயில் போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago