2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு; வயோதிபர் அடித்துக் கொலை

Freelancer   / 2025 மார்ச் 16 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசம் மாநிலம், மைஹார் மாவட்டத்தில், ஹோலி கொண்டாட்டத்தின்போது பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில் வயோதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்கிசார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கேவாட். வெள்ளிக்கிழமை (14) இரவு, சங்கரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தீபு கேவாட் என்பவர் ஹோலி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சத்தமாக பாட்டு போட்டுள்ளார். இதனால் சங்கரின் குழந்தைகளால் படிக்க முடியவில்லை.

இதையடுத்து சங்கர், தீபுவிடம் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தீபுவும் அவரது உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சங்கரின் தந்தை முன்னா கேவாட் (64 வயது) படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவரை மீட்டு, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த வயோதிபர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதை தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் மீது பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X