2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பாடசாலையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Freelancer   / 2025 ஜனவரி 26 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, தாலுகா பத்தரசன்கோட்டை கிராமத்தை சேர்ந்த  சக்தி சோமையா (வயது 14) என்ற சிறுவன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பொய்யாவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பாடசாலையில் 9ம் வகுப்பில் படித்து வந்தார். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (24), கணினி பயிற்சிக்காக பள்ளியில் கம்ப்யூட்டரை இயக்க சுவிட்சை தொட்ட போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, குறித்த சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

இதையடுத்து, பாடசாலை அதிபரை  பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர்  உத்தரவிட்டார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். 

உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 இலட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .