Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 02 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாஜகவின் அமைப்பு விதிகளின்படி தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது, 36 மாநிலங்களில் 12இல் மட்டுமே தேர்தல்கள் முடிந்துள்ளன. எனவே தேசிய தலைவர் தேர்தலுக்கு குறைந்தபட்சம் இன்னும் 6 மாநிலங்களில் தேர்தல் முடிக்க வேண்டியுள்ளது.
பிஹார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் இத்தேர்தல்கள் 7 முதல் 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் முடிந்ததும் புதிய தேசிய தலைவரை பாஜக தேர்ந்தெடுக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago