Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 மே 20 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருந்து ஒன்றில் கடைசி இருக்கையை படுக்கை அறை போல மாற்றி ஒரு ஜோடி சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது. பஸ் முழுக்க பயணிகள் கூட்டம் இருக்கும் போதே எதையும் பொருட்படுத்தாமல் அந்த ஜோடி சல்லாபத்தில் ஈடுபட்டது பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.
பொது இடங்களில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக காதல் ஜோடிகள் என்ற பெயரில் எங்கே இருக்கிறோம்.... சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கால தனி உலகத்தில் இருப்பது போல சல்லாபத்தில் ஈடுபடுவதை சில இடங்களில் காண முடியும். பொத்தாம் பொதுவாக காதல் ஜோடிகளே அப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது.
ஆனால், ஒரு சிலர் இப்படி எல்லை மீறி நடக்கும் சம்பவங்கள் பொது இடங்களில் பிற மக்களுக்கும் இடையூறாக அமைந்து விடுகிறது. பைக்கில் செல்லும் போது ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு முத்தம் கொடுத்துக் கொள்வது, பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தில் தங்களை மறந்து அன்பை பரிமாறிக்கொள்வது என சில ஜோடி செய்யும் சேட்டைகள் வயது வந்த பெரியவர்களையே கணகளை மூடச்சொல்லும் அளவுக்கு இருக்கும்.
குறிப்பாக டெல்லி மெட்ரோவில் அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், அரசு பேருந்து ஒன்றில் கடைசி இருக்கையை படுக்கை அறை போல மாற்றி ஒரு ஜோடி சல்லாபத்தில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது. இத்தனைக்கும் பஸ் முழுக்க பயணிகள் கூட்டம் உள்ளது. ஆனாலும் இது எதையும் பொருட்படுத்தாமல் அந்த ஜோடி, ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டு முகம் சுழிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.
ஒடிசாவில் உள்ள அரசுப்பேருந்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில் டெல்லியில் உள்ள பேருந்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இப்படி இருவேறு கருத்துக்கள் நெட்டிசன்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து உள்ள நிலையில், அவரது பதிவுக்கு கீழே கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்கள் நெட்டிசன்க்ள்.
பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்து கொள்வது.. இந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ஆவேசமாக பதிவிட்டு வருகிறார்கள். அதேவேளையில் சில நெட்டிசன்கள் இந்த ஜோடிக்கு ஆதரவாக கருத்துக் கூறிய வினோதமும் நடைபெற்றுள்ளது. அதாவது, அவர்களுக்கு வேறு இடத்தில் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் இதுபோல பொது இடத்தில் நடந்திருக்கலாம் என சொல்லியிருக்கின்றனர்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், பைக்குகளில் போகும் போது அநாகரீகமாக நடந்து கொண்ட காட்சிகள் வைரலானது. தற்போது பல பயணிகள் பயணம் செய்யும் இடத்தில் கொஞ்சம் கூட எதைப்பற்றியும் நினைக்காமல் இப்படி அநாகரிக செயலில் ஈடுபடுகிறார்களே என ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த ஜோடி மீது எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago