2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்

Freelancer   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற வளாகத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. கனிமொழி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தில், இன்று (9) விவாதிக்க கோரியே, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தின் போது, அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் தொடர்பான தீர்மான பத்திரங்கள் மீது விவாதம் நடத்தக்கோரி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். 

இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையே, காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .