2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பம்பையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குவிப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்கால்  புயல் காரணமாக  கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழையுடனான வானிலை வருகிற 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இந்நிலையில், சபரிமலையிலும் கடந்த இரு தினங்களாக அடைமழை பெய்துவருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். 

இந்நிலையில், பம்பை ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள் எச்சரிக்கையுடன் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வனப்பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பம்பை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பம்பை ஆற்றின் இருபுற கரைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .