Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 29 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூகினியாவுக்கு 1 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பு ரூ.8.31 கோடி) மதிப்பிலான நிவாரண உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலை கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த விபத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச நாடுகளின் உதவிகளை அந்நாட்டு அரசு நாடியுள்ளது.
இந்நிலையில், பப்புவா நியூகினியாவுக்கு 1 மில்லியன் டொலர் மதிப்பிலான நிவாரண உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
மேலும், இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பப்புவா நியூகினியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago