Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரலாப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இராமாயண நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது பேய் வேடத்தில் நடித்த 45 வயது நாடக நடிகர் ஒருவர், மேடையில் உயிருடன் இருக்கும் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநில சட்டசபை கூட்டம், திங்கட்கிழமை (2) நடைபெற்ற நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பாபுசிங் மற்றும் ஜனாதன் பிஜுலி ஆகியோர் பேசினர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் நாடக அமைப்பாளர்களில் ஒருவரான பின்பதர் கவுடா ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .