2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 18 பேர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில், செவ்வாய்க்கிழமை (1)  இடம்பெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்தனர்.

 குறித்த பட்டாசு ஆலையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட இடிபாடுகள் இடையே மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X