2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பசுக்களின் மடியை வெட்டியவர் கைது

Freelancer   / 2025 ஜனவரி 13 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு - சாம்ராஜ்பேட்டை அருகே காட்டன்பேட்டை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பழைய பென்சன் மொகல்லா பகுதியில், 3 பசுக்களின் மடியை வெட்டிய நபரை பொலிஸார் கைதுசெய்தனர். 

 பழைய பென்சன் மொகல்லா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர்,  3 பசு மாடுகளை வளர்த்து வந்தார்.

 அந்த பசுக்கள் பழைய பென்சன் மொகல்லா வீதி, அங்குள்ள வினாயகா திரையரங்கு பகுதிகளில் இரை தேடி சுற்றித்திரிவது வழக்கம். அதுபோல், சனிக்கிழமை (11)  நள்ளிரவும் 3 பசு மாடுகளும் திரையரங்கு பின்புறம் சுற்றித்திரிந்தது. 

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், 3 பசு மாடுகளின் பால்மடியை பிளேடால் அறுத்ததாக தெரிகிறது. இதனால் பசுக்களின் பால்மடியில் இருந்து இரத்தம் வெளியேறியபடி இருந்தது. 

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (12) காலையில், பசுக்களின் பால்மடி அறுக்கப்பட்டும், ரஇத்த காயங்களுடனும் சுற்றித்திரிவதை பார்த்து பசுக்களின் உரிமையாளர் கர்ணா மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து,  பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் 3 பசுக்களின் மடியை வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார். 

கைது செய்யப்பட்ட நபர்,  குற்றம் செய்தபோது குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. 

பசுவின் உரிமையாளருக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு அரசு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, அம்மாநில பாஜக தலைவர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X