Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கில், அதானி நிறுவனத்தின் அதிபர் கௌதம் அதானி, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து மும்பை உச்சநீதிமன்றம், திங்கட்கிழமை (17) தீர்ப்பளித்தது.
முன்னதாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன் மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பு (எஸ்.எப்.ஐ.ஒ.) 2012ஆம் ஆண்டு கௌதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தது.
குற்றசதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 2014ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து கௌதம் அதானி, ராஜேஷ் அதானியை விடுவித்து இருந்தது.
ஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செசன்சு நீதிமன்றம், அந்த உத்தரவை இரத்து செய்தது.
இதை எதிர்த்து தொழில் அதிபர்கள் 2 பேரும் மும்பை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செசன்சு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து இருந்தது. மேலும் மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.என்.லத்தா அமர்வு முன்னிலையில், திங்கட்கிழமை (17) நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இருந்து கௌதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago