Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 25 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், கடந்த 3 ஆண்டுகளில், பகிடிவதை காரணமாக, 51 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கல்விச் சமூகத்துக்கு எதிரான வன்முறை (சேவ்) என்ற அமைப்பு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை கொடுமைகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து வெளியிடுகிறது.
அவர்கள் தற்போது 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலத்தில் கல்வி மையங்களில் நடந்த பகிடிவதை நிகழ்வுகள் குறித்து பட்டியலிட்டு உள்ளனர்.
அதில் தேசிய அளவில் பகிடிவதை கொடுமைக்கு எதிரான உதவி எண்ணில் 3 ஆயிரத்து 156 புகார்கள் பதிவாகி உள்ளன. அதில் 1,946 கல்லூரிகளின் பெயர்கள் இந்த புகாரில் சம்பந்தப்பட்டு உள்ளது. அவற்றில் பல கல்லூரிகள் மிகவும் பிரபலமான கல்வி மையங்களாகும். உதவி எண் அல்லாமல் கல்லூரி அளவில் இன்னும் அதிகமான புகார்கள் பதிவாகி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவான புகார்களில் மருத்துவ கல்லூரிகளில் 38.6 சதவீத ராகிங் நடந்ததாக தெரியவந்துள்ளது.
அவற்றில் 35.4 சதவீதம் தீவிர நடவடிக்கை புகார்களாகும். இந்த 3 ஆண்டுகளில் 51 மாணவ மாணவிகள் பகிடிவதை கொடுமைக்கு பலியாகி உள்ளனர்.
1.1 சதவீத மாணவர்களே இந்த பகிடிவதை குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது கோடா பயிற்சி மைய நகரில் தற்கொலை செய்து கொண்ட 57 மாணவர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago