2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

நாளையுடன் முடிகிறது மகா கும்பமேளா

Freelancer   / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 01:32 - 0     - 11

ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, நாளையுடன் (26) நிறைவடைகிறது.

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ஆம் திகதி தொடங்கியது. 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. 

 இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வரும் கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளையுடன் (26) நிறைவடைகிறது. 

நிறைவு நாளான நாளை, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X