Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 30 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, சனிக்கிழமை (29), இந்திய தலைநகர் டெல்லிக்கு இண்டிகோ விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
உத்தரபிரதேசத்தின் லக்னோ வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த சதீஷ் சந்திர பர்மன் (வயது 63) என்ற பயணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் நடுவானில் விமானத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பின்னர், உயிரிழந்த பயணியின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நடுவானில் விமானத்தில் பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .