Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Mayu / 2024 ஜூலை 01 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நபரொருவர் ஒரு பெண்ணை சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பகிரப் பட்டு வருகிறது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சமூக வலைதளங் களில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பொது இடத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்துவிட்டார். அந்த இடத்தில் இருக்கும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் அந்த ஆண், தரையில் விழுந்து கிடக்கும் மற்றொரு ஆணையும் தாக்குகிறார்.
தாக்குதல் நடத்தியவர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தஜேமுல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தலிபான் பாணியில் விரைவாக நீதி வழங்கும் அமைப்பாக கருதப்படும் 'இன்சாப் சபா' வழங்கிய உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர். இதுகுறித்து இஸ்லாம்பூர் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
46 minute ago
51 minute ago