2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

தீ விபத்து: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 21 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைத்தியசாலையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு பிரிவில், கடந்த வெள்ளிக்கிழமை (15),  தீ விபத்து ஏற்பட்டது.ஆந்திரா

இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறல், தீக்காயங்களால் 10 குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 39 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டன. இதில் சில குழந்தைகளுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனால் இந்த தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X