2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

தீ விபத்து: 20 குடிசைகள் தீக்கிரை

Freelancer   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள குடிசை குடியிருப்பில் புதன்கிழமை (2) அதிகாலையில் ஏற்பட்ட  தீ விபத்தில், 20 குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. 

 

இந்த பகுதியில்,  200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருக்கின்றன.  

 தீக்கிரையான குடிசைகளின் உள்ளே எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

  அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வீடுகளில் தீ பரவியது தெரியவந்துள்ளது.

 அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X