2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திரைப் பட பாணியில் மருத்துவமனை ஊழியரைக் கைது செய்த பொலிஸ்

Freelancer   / 2024 மே 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சதீஷ்குமார் என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி  இதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த ஒரு பெண்ணுக்கு, சதீஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து, சதீஷ்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாகப் பொலிஸிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்காக பொலிஸ் தயாராக இருந்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரைக் கைது செய்ய மருத்துவமனைக்கு வந்த பொலிஸார், தாங்கள் வந்த ஜீப்பை வெளியே நிறுத்திவிட்டு வராமல் சினிமா பட பாணியில் மருத்துவமனைக்குள்ளேயே ஓட்டி வந்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்க பொலிஸ் வாகனம் நடுவில் வருவதும், அங்கிருந்த மற்றவர்கள் ஸ்ட்ரெச்சரை நகர்த்தி வாகனத்துக்கு வழிவிடுவதும் இருக்கிறது.

இது குறித்து எஸ்.எஸ்.பி கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காவல்துறை வாகனம் மருத்துவமனையின் நான்காவது மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார். S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .