Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 28 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில் திருவிழாவில் மேடை சரிந்து வீழ்ந்ததில், 7 பேர் உயிரிழந்தனர்
உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் சமண (ஜெயின்) மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் ஆண்டுதோறும் லட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. பத்கர்கள் லட்டுகளை கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான லட்டு திருவிழா, இன்று (28) நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி மதவழிபாட்டு தலத்தில் மூழ்கில் கம்புகளால் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் 100க்கும் மேற்பட்டோர் ஏறி வழிபாடு நடத்த முற்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago