2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

திருமணத்தில் அரங்கேறிய கொலை

Mayu   / 2024 ஒக்டோபர் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்தில் டி.ஜே பாடல் போடும் தகராறில் மாப்பிள்ளை பக்க விருந்தினர், பெண் வீடு சார்பாக வந்த விருந்தினரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

அண்மைக் காலமாக திருமண நிகழ்வுககளில் டி.ஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒலிபரப்புவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.

ஆனால், மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதானமாகி நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

பின்னர் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஆத்திரம் அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த விருந்தினர் ஒருவரை இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .