Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு, தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை, திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம், தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில், திங்கட்கிழமை (18) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, “திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை இடமாற்ற முடிவு செய்துள்ளோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்" என்றார்.
2018ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, திருப்பதி கோவிலில் 44 பிற மத ஊழியர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago