2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

திரிவேணியில் இதுவரை 13 கோடி பேர் புனிதநீராடல்

Freelancer   / 2025 ஜனவரி 27 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பெப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவுக்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று (27) காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .