2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

திரால் சவுக்’ பகுதியில் முதன்முறையாக பறந்த இந்திய தேசிய கொடி

Freelancer   / 2025 ஜனவரி 27 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் சவுக் பகுதியில், முதன்முறையாக இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் 76ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றன. 

இந்த சூழலில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் சவுக் என்ற பகுதியில் முதன்முறையாக இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. 

இந்த கொடியை 3 தலைமுறையை சேர்ந்தவர்கள் சேர்ந்து ஏற்றியுள்ளனர்.

இதுபற்றி இந்திய இராணுவம் வெளியிட்ட செய்தியில், 

“வயோதிபர் ஒருவர், இளைஞர் மற்றும் ஒரு சிறுவர் ஆகியோர் சேர்ந்து கொடியை ஏற்றினர். தலைமுறைகளின் ஒற்றுமை மற்றும் தேசத்துக்கான பகிரப்பட்ட உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றை இது வெளிப்படுத்துகிறது.

இந்த செயல்முறை, ஒளிரும் வருங்காலம் நோக்கிய கூட்டு பயணத்தில், வயது வேற்றுமையின்றி இந்திய மக்களுக்கு இடையேயான வலுவான பிணைப்பு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .