2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தினமும் தாய் அடித்த அடியால் 10 வயது சிறுமி பரிதாப மரணம்

Freelancer   / 2024 ஜூலை 28 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயொருவர், தான் பெற்ற மகளை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ள நிலையில், உள்காயம் காரணமாக சிறுநீரகம் பழுதாகி 10 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின், பிரேத பரிசோதனை அறிக்கையில் இத்தகவல் தெரிந்ததையடுத்து, தாயை பொலிஸார் கைது செய்தனர்.

கோவை, தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரின் மகளான 10 வயதான அனு ஸ்ரீ கடந்த மே மாதம், 17ஆம் திகதி கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக கூறி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, தட்சிணாமூர்த்தி செல்வபுரம் பொலிஸாரிடம் புகார் அளித்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையை கண்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியின் உடலில், 33 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் விசாரித்ததில், அவர் மகளை அடித்து துன்புறுத்தியதே மரணத்துக்கு காரணம் என தெரியவந்தது. இந்நிலையில், அவரை பொலிஸார் கைது செய்து, சிறையில் அடைந்தனர்.

இதுபற்றி பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறுமி அனு ஸ்ரீ நன்றாக படிக்கக் கூடியவர். இருப்பினும் சாந்தலட்சுமி மேலும் நன்றாக படிக்க வலியுறுத்தி, அடிக்கடி சிறுமியை கரண்டியால் அடித்துள்ளார். இதை, அருகில் வசிப்பவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அடித்து வந்ததால், சிறுமிக்கு உள்காயம் ஏற்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் தசை சிதைந்துள்ளது. இதனால் இரத்தம் கசிந்து, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என்றார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .