Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியானா மாநிலம் - பிவானி மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களது ஆசிரியரின் நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து ரிமோட் மூலம் இயக்கி வெடித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், அறிவியல் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர் ஒருவர் 12ஆம் வகுப்பு மாணவர்களை திட்டியுள்ளார்.
இதனால், குறித்த ஆசிரியரை பழிவாங்க நினைத்த மாணவர்கள் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, வெடிகுண்டு தயாரிப்பதை கற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த வெடிகுண்டை ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வைத்துள்ளனர்.
ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்ததும் வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.
விசாரணையில் வகுப்பில் உள்ள 15 மாணவர்களில் 13 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, குறித்த 13 மாணவர்களை அரியானா கல்வித்துறை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago