2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2025 மார்ச் 11 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற வளாகத்தில், தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள், செவ்வாய்க்கிழமை (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

 

புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, புதிய கல்விக்கொள்கை, கல்வி நிதி தொடர்பாக, திங்கட்கிழமை (10), மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் தி.மு.க. எம்.பி.க்களுக்கும் இடையே பாராளுமன்றத்தில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

 குறிப்பாக தி.மு.க. எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவரது பேச்சை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள்  நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின்னர், பாராளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை விவகாரம், மும்மொழிக்கொள்கை, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .