Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 28 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் நேற்று ஒரே நாள் இரவில் மூன்று கொலைகள் நடந்துள்ள சம்பவம், கொலைக்களமாக மாறுகிறதா தாம்பரம் என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லை பகுதியில் 21 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. தாம்பரம், பள்ளிகரணை என இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு துணை ஆணையர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட தாம்பரம், குரோம்பேட்டை, குன்றத்தூர் காவல்நிலைய எல்லையில் நேற்றிரவு மட்டும் மூன்று கொலைகள் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் ராஜா என்பவருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகி ஆனந்த் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஆனந்த், அவரது நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து நேற்றிரவு ஆட்டோவில் வந்து கார்த்திக் ராஜாவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளார். இதையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.
அதே போல் நேற்றிரவு குரோம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருநீர்மலை சாலையில் தோமஸ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரி என்பவரிடம், அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் குறைந்த விலையில் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி வாங்க 30 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட சபரி, பொருட்களை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தோமஸ், சபரியை திட்டியதோடு அவரது குடும்பத்தினரையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை மனதில் வைத்துக் கொண்டு தோமஸை கொலை செய்ய திட்டமிட்ட சபரி, பணம் தருவதாக அழைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதேசமயம், குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்மரபாக்கம் ஏரி அருகே செங்கல் சூளையில் வேலை செய்யும் ராஜேஷ் (30) என்பவர் நடந்து சென்ற போது, இருசக்கர வாகன்த்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தரமறுக்கவே அவரை கத்தியால் வெட்டி விட்டு கைபேசி, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஒரே நாள் இரவில் நடைபெற்ற மூன்று கொலைகள் தாம்பரம் மாநகர காவல் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மூன்று கொலை சம்பவங்களில் குரோம்பேட்டை குற்றவாளி சரணடைந்ததை தவிர குன்றத்தூர், தாம்பரம் கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை விரைந்து பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago