2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

திருமண விருந்தை குழப்பிய சிறுத்தை

Freelancer   / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புத்தேஷ்வர் சாலை பகுதியில், புதன்கிழமை (12) இரவு, திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. 

விருந்தினர்கள் பலர் சாப்பிடுவதற்காக அந்த அறையில் கூடியிருந்த போது, சிறுத்தை ஒன்று திடீரென உள்ளே நுழைந்தது.

இதனை பார்த்த விருந்தினர்கள் அனைவரும்  அலறியடித்தபடி தப்பியோடினர். 

இந்த தகவல் அறிந்த மணமக்களும் பயத்தில், திருமண அரங்கில் இருந்து ஓடிச்சென்று காருக்குள் புகுந்து கொண்டனர்.

இந்த விடயம் அறிந்து பொலிஸார், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். பல மணிநேரம் போராடி சிறுத்தையை அவர்கள் பிடித்தனர். 

சிறுத்தையை பிடிக்கும் வரை, மணமக்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பிற்காக அவரவர்களுடைய  வாகனங்களில் தஞ்சமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .