2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு சிறுமி உட்பட 3 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 31 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மலையடிவாரா, தாழ்வார பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேசமயம், தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வால்பாறை அருகே உள்ள சோலாயார் அணை அருகே இடதுகரை என்ற பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 14 வயது சிறுமி உட்பட மூவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் காட்சிமுனை அருகே ஏற்பட்ட மண் சரிவால் உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல கர்நாடகாவில் மங்களூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .