2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

தமிழிசையை சிறை பிடித்த பொலிஸார்

Editorial   / 2025 மார்ச் 06 , பி.ப. 05:21 - 0     - 19


 

 மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை எம்ஜிஆர் நகரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ( பாஜக) மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 2 மணி நேரத்துக்கும் மேலாக பொலிஸார் சிறை பிடித்தனர். அவரை விடுவிக்கக் கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜக சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் (மார்ச் 6) நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.அப்போது, அனுமதியின்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜனை பொலிஸார் தடுத்தனர்.

கையெழுத்து இயக்கத்தை கைவிட்டு, இங்கிருந்து கலைந்து செல்லுமாறு, தமிழிசை உட்பட பாஜகவினர் அனைவரையும் பொலிஸார் எச்சரித்தனர். ஆனால், தமிழிசை சவுந்தரராஜன், “பொதுமக்களிடம் கையெழுத்து பெறாமல், இங்கிருந்து ஒரு அடிகூட நகர மாட்டேன்” என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கேயே நின்றார். பொலிஸார் அவரை சூழ்ந்துகொண்டு சிறை பிடித்து வைத்திருந்தனர். தொடர்ந்து, 2 மணி நேரத்துக்கும் மேலாக தமிழிசை அங்கேயே நிற்க வைக்கப்பட்டார். இதையடுத்து, தமிழிசையை விடுவிக்குமாறு பாஜகவினர் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் அப்போது, பொலிஸார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

 

இந்த கையெழுத்து இயக்கத்தைக் கேள்விப்பட்டு, திமுகவினரும் அங்கு திரண்டு, பாஜகவினரைக் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், பொலிஸார் திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 2 மணி நேரத்துக்குப் பிறகு, பொதுமக்களிடம் கையெழுத்து பெற தமிழிசைக்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ஓர் அரசியல் கட்சித் தலைவரை கொடுமைப்படுத்தி 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். கைது செய்யுங்கள் என்றாலும் கைது செய்ய பொலிஸார் மறுக்கின்றனர். இது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ இல்லை. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். முதல்வர், அமைச்சர்கள் வீட்டில் இருப்பவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X