2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தமிழகத்தில் டெங்கு எச்சரிக்கை

Freelancer   / 2024 மே 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும், டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பருவமழை தொடங்க உள்ளதால் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், நோய் தடுப்பு மையங்களை அமைத்து டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், “பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும்.

அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள் படுக்கைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு நுளம்பு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம், டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத்  தேவையான இரத்தத் தட்டணுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் போன்றவை போதுமான அளவில் இருப்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .