2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை

Freelancer   / 2024 மே 19 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருவதால், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்  தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 7 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 8 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், இது குறித்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 21 வரை, பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (19) காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 0.72 செ.மீ. மழை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .