2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

Freelancer   / 2024 ஜூன் 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது பாரதிய ஜனதா.

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கியது.

பிற்பகல் வாக்கில் தெளிவான முன்னிலை நிலவரங்கள் தெரியவந்தது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி 230க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் முதல்முறையாக கால் பதித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாது தெலங்கானாவிலும் அக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்தில் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை.

குஜராத், இமாச்சல், டெல்லி ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .