Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 17 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளவில் கடந்த ஆண்டு தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பெற்றோரிடம் இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒரு வயதை எட்டுவதற்கு உள்ளாகவே பலவகையான தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகின்றன.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் இந்த தடுப்பூசிகள் இலவசமாகவே போடப்படுகின்றன. இதனால் ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் பயன்பெறுகின்றன.
கடந்த ஆண்டு சர்வதேச அளவில் யுனிசெஃப் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் 16 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் நைஜீரியா 21 இலட்சம் குழந்தைகள் என்ற எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் 4,67,000 குழந்தைகளுக்கும், பாகிஸ்தானில் 3,96,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என யுனிசெஃப் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 minute ago
29 minute ago
32 minute ago