Freelancer / 2024 மே 13 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ஆம் திகதி, வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
பின்னர் அவர், கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பகீர் தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை அடித்து துன்புறுத்தப்பட்டிருந்ததும், அவரின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த பின்னர் 4 மணி நேரம் கழித்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டு உடல் ஏரிக்கப்பட்டுள்ளது என்ற பகீர் தகவலும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.S
32 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025