2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஜன.22இல் சீமான் வீடு முற்றுகை

Freelancer   / 2025 ஜனவரி 15 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 22ஆம் திகதியன்று, சீமான் வீடு முற்றுகையிடப்படும் என, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசிய மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 22ஆம் திகதியன்று, சீமான் வீடு முற்றுகையிடப்படும் என, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .