2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சுற்றுலா தலங்களில் படப்பிடிப்பு நடத்த தடை

Freelancer   / 2025 மார்ச் 31 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடை சீசனை முன்னிட்டு,  நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இதை அனுபவிப்பதற்காக உள்நாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் 

தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திதகதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலைத்துறைக்கு சொந்தமான 7 இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .