2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

சுரங்க விபத்து:ஒரு மாதத்துக்கு பின் 2ஆவது சடலம் மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 26 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா -  நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் சடலத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

 தோமலபென்டா பகுதியருகே அமைந்த சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி திடீரென மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் தப்பியபோதும், 8 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். 

 சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில் நுட்பம் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்தது.

கேரளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தொழிலாளியின் சடலம் கடந்த மாதம் 9ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் லோடேட்டி தலைமையில் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் புதன்கிழமை (26) அதிகாலை மற்றொரு சடலம் காணப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த கன்வேயர் பெல்ட்டுக்கு 50 மீற்றர் தொலைவில் ஒருவரின் சடலம் காணப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், 6 தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X