2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

சுனிதாவின் வருகையால் குதூகலத்தில் குஜராத் மக்கள்

Freelancer   / 2025 மார்ச் 19 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான ஜுலாசன் கிராமத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. 

முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்கு முன்பு விண்வெளிக்கு சென்றபோது, அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டி ஜுலாசன் கிராம மக்கள் 'அகண்ட் ஜியோத்' என்று அழைக்கப்படும் தீபத்தை ஏற்றி வைத்து அதை அணையாமல் பாதுகாத்து வருகின்றனர்.

தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

பேரணி முடிந்தவுடன் கோவிலில் வைத்து 'அகண்ட் ஜியோத்' தீபம் அணைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், விரைவில் சுனிதா வில்லியம்சை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பதற்கு ஜுலாசன் கிராம மக்கள் திட்டமிட்டுள்ளதாக சுனிதா வில்லியம்சின் உறவினர் நவீன் பாண்டியா தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் சுமார் 3 முறை இந்தியாவிற்கு வந்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு சார்பில் பத்ம் பூஷன் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X