2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிக்கிமில் மீண்டும் முதல்வராகும் தமாங்

Freelancer   / 2024 ஜூன் 02 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிக்கிமில் 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இங்கு பிரேம்சிங் தமாங் மீண்டும் முதல்வராகும் நிலையில், எஸ்.டி.எப். கட்சி 1 தொகுதியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

அதேசமயம், அருணாச்சலில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்ட நிலையில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே, 10 தொகுதிகளில் பா.ஜ., போட்டியின்றி வெற்றி பெற்றது.

மொத்தம் 60க்கு 47 தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக இருக்கும் பெமாகாண்ட் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

மேலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் , மற்றவர்கள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .